மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கு மகிந்தவுக்கு வாய்ப்பில்லை!- துமிந்த

uஎதிர்கால தேர்தல்களில் தமது பதவிகளை முன்னிறுத்தாமல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன்ஒத்துழைப்பார் என்று எதிர்ப்பார்ப்பதாக கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்கதெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

கட்சியை புதிய திசையில் கொண்டு செல்வதற்காகவே, புதிய அமைப்பாளர்கள்நியமிக்கப்பட்டதாகவும் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் குருநாகல் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் மஹிந்த தரப்பினர்அதனை நிராகரித்தனர்.

இதற்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை விடஅவர்களே தற்போது மக்கள் ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இருக்கிறார்கள் என்பதைதெரிந்து கொண்டிருப்பார்கள் என்று துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவை பொறுத்தவரையி;ல் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் முதல் ஜனாதிபதிவரையிலான அனைத்து பதவிகளையும் வகித்துள்ளார்.

எனவே மீண்டும் ஜனாதிபதி தேர்தலிலோ,பிரதமர் தேர்தலிலோ குறிவைக்காது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர்என்ற அடிப்படையில் அவர் செயற்படவேண்டும் என்றும் துமிந்த திஸாநாயக்கதெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதற்கு அவருக்கு வாய்ப்பில்லை. எனவே கட்சியின் புகழுக்கும்வெற்றிக்கும் அவர் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்செயலாளர் கோரியுள்ளார்.