கூட்டு எதிர்க்கட்சி நாடு முழுவதிலும் கூட்டம் நடாத்தத் தீர்மானம்!

downloadகூட்டு எதிர்க்கட்சி நாடு முழுவதிலும் கூட்டங்களை நடாத்தத் தீர்மானித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டங்களை நடாத்த சூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

மாவட்ட மட்டத்தில் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

இதன்படி, எதிர்வரும் மாதம் இரண்டாம் வாரத்தில் இரத்தினபுரி மாவட்டத்தை உள்ளடக்கும் வகையில் எஹலியகொடவில் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாரச்சி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை உள்ளிட்ட சில விடயங்களின் அடிப்படையில் இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.