மைத்திரி,மஹிந்தவை போன்று ஊடகவியலாளர்களை அச்சுறுத்தவில்லை!

downloadமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை போன்று தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன ஊடகவியலாளர்களை பயமுறுத்துவது இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த கருத்தை செய்தியாளர்களிடம் கடந்த வார இறுதியில்தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச, ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டார்தமது குடும்பத்தினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் செய்திகளை வெளியிடும்கடும் கோபத்தை வெளிக்காட்டுவார்.

எனினும் மைத்திரிபால சிறிசேன, ஊடகவியலாளர்கள் தமது பணிகளை செய்யவேண்டும் என்றேவலியுறுத்துவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சர்வதேச ஊடக சுதந்திர பட்டியலில் 165 வது இடத்தில் தரப்பட்டிருந்தஇலங்கை இன்று 141வது இடத்துக்கு தரப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர்குறிப்பிட்டுள்ளார்.