நீதிக்கான அனைத்துலக பொறிமுறையும் அரசியற் தீர்வுக்கான வழிமுறையும் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு நிறைவுகண்டது

TGTE_T3ஈழத் தமிழினத்துக்கான நீதியினை வென்றடைவதற்குரிய அனைத்துலக பொறிமுறையும், அரசியற் தீர்வுக்கான வழிமுறையோடும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு நிறைவுகண்டது.

நா.தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் நான்காவது நேரடி அரசவை அமர்வு டிசெம்பர் 4,5,6 ஆகிய நாட்கள் நியு யோர்க்கிலும், லண்டனிலும் இடம்பெற்றிருந்தது.

புலம்பெயர் தேங்களில் இருந்து நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் மற்றும் சமூக-அரசியற் வள அறிஞர்கள் என பலரும் இந்த அமர்வில் பங்கெடுக்கெடுத்திருந்தனர்.

அரசவைத் தலைவர் முனைவர் தவேந்திராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றிருந்த அரசவை அமர்வானது, உலக்தமிழர்களின் பலத்தினை கட்டியெழுப்புதல், ஈழத் தமிழர்களுக்கான அனைத்துலக நீதி ஆகிய விடயங்களை மையப்பொருளாக கொண்டு இடம்பெற்றிருந்தது.

TGTE_T TGTE_T1 TGTE_T2 TGTE_T3 TGTE_T4 TGTE_T5 TGTE_T6 TGTE_T7 TGTE_T8 TGTE_T9 TGTE_T10 TGTE_T11 TGTE_T12 TGTE_T13

புலம்பெயர் தேங்களில் இருந்து நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் மற்றும் சமூக-அரசியற் வள அறிஞர்கள் என பலரும் இந்த அமர்வில் பங்கெடுக்கெடுத்திருந்தனர்.

அரசவைத் தலைவர் முனைவர் தவேந்திராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றிருந்த அரசவை அமர்வானது, உலக்தமிழர்களின் பலத்தினை கட்டியெழுப்புதல், ஈழத் தமிழர்களுக்கான அனைத்துலக நீதி ஆகிய விடயங்களை மையப்பொருளாக கொண்டு இடம்பெற்றிருந்தது.

அரசியல், ஜனநாயக, இராஜதந்திர வழிமுறைகளில் தமிழீழ விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் இன்றைய காலகட்டுத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஜனநாயக நடைமுறையினை நிறைவேற்றும் முனைப்புடன் நாம் இங்குகூடியுள்ளோம் என அமர்வின் தொடக்க நாள் உரையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் இருந்து தோழர் தியாகு, பேராசிரியர் மணிவண்ணன், அனைத்துலக சட்டவாளர்கள் டேவிட் மித்தாஸ், கரேன் பார்க்கர், ஜில் பிக்குவா, மற்றும் பேராசிரியர் பீற்றர் சார்க், பேராசிரியர் குறூம் உட்பட வளப் பெருமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழகத்தினை ஆட்கொண்ட கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாhல் உயிரிழந்தவர்களுக்கும், உயிர்மீட்கும் பணியின் போது உயிர்நீத்தவர்களுக்கும் என தமிழ உறவுகளுக்கு எல்லோருக்குமாக தனது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை தோழமையினையை வெளிப்படுத்தியிருந்ததோடு, தமிழக இயற்கை பேரிடர் துயர் தணிப்பு நிதியம் எனும் பெயரில் செயற்திட்டமொன்று தொடங்கி வைத்திருந்தது.

ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதி எனும் தொனிப் பொருளிலில் இடம்பெற்றிருந்த மைய விவாதத்தினை பேராசிரியர்கள் சொர்ணராஜா மற்றும் குறூம் ஆகியோர் நடாத்தியிருந்தனர்.

யுகோசுலாவியா அனைத்துலக விசாரணை பொறிமுறையின் அனுபவங்களின் அடிப்படையில் ஈழத் தமிழர்களுக்கான அனைத்துலக நீதியினை வென்றடைவது தொடர்பில் இவ்விவாதம் அமையப்பெற்றிருந்ததோடு, ஜெனீவாவுக்கு அப்பால் நாம் அனைத்துலக மட்டத்தில் செயலாற்ற வேண்டிய விடயங்கள் இதில் செயல்வடிவம் பெற்றிருந்தது.

நா. தமிழீழ அரசாங்கத்தின் மேற்சபை உறுப்பினர்களான பேராசிரியர் சத்யா சிவராமன் மற்றும் முனைவர் பிறேயன் செனவறட்ன ஆகியோர் பங்கெடுத்த, உலக் தமிழர்களின் பலத்தினை கட்டியெழுப்புதல், தமிழர்களின் நீதிக்கும், அரசியல் உரிமைக்குமான ஆதரவு தளத்தினை அனைத்துலக மட்டத்தில் கட்டியெழுப்புதல் தொடர்பிலான விவாதம் இடம்பெற்றிருந்தது.

தை மாத்தினை மையமமாக கொண்டு உலகளாவிய தமிழர் மரபுத் திங்கள் தீர்மானம் ஏகமனதாக சபையில் நிறைவேற்றப்பட்டிருந்ததுது.

பிரதமர் பணிமனையின் தலைமைச்செயலர், அமைச்சர்கள் மற்றும் மையத்தலைவர்களது செயற்பாட்டு அறிக்கைகள் அவையில் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருந்ததோடு, அiவைப்பிரதிநிதிகளது கருத்துரைகளும் இடம்பெற்றிருந்தன.

தமிழீழ பெருவிருப்பினை உலகிற்கு முரசறைந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டில் (2016) தமிழீழத்துக்கான அரசியல் யாப்பினை உலகத் தமிழர்களின் பங்களிப்போடு வரையும் செயற்திட்டம் குறித்து அமர்வின் நிறைவுநாள் எழுச்சியுரையில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்திருந்தார்.