உயிரிழந்த மாவீரர்களுக்கு நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி புகழாரம்

sritharan_parli-002யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளுக்கும் மாவீரர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் புகழாரம் சூடினார்.

நாடாளுமன்றில் வரவு செலவு திட்டத்தில், இன்று ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் உயிர் நீத்த உறவுகளுக்கு தன்னுடைய அனுதாபத்திற்குரிய உரையை நிகழ்த்தினார்.

தன்னுடைய உரையில், உயிர் நீத்த மாவீரர்கள் தன்னுடைய இளமைக் காலத்தையும் இன்ப துன்பங்களையும் தமிழ் மக்களுக்காக தியாகம் செய்ததனால் தமிழ் மக்கள் அனைவரும் இந்த வீரர்களை சிரம் தாழ்த்தி நினைவு கூற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.