நோர்வேயில் நடைபெற்ற மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா-2013

Norway-2013-Tamils-sports-seithy (5)நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவால் 15வது தடவையாக நடாத்தப்பட்ட மாவீரர் நினைவாக தமிழர் விளையாட்டு விழா 22.06.2013, 23.06.2013 சனி,ஞாயிறு ஆகிய தினங்களில் Stovner மைதானத்தில் Star pizza நிறுவனத்தினர் மற்றும் Flamingo pizza நிறுவனத்தினர் ஆதரவில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

தமிழ்தேசிய ஒற்றுமையை மேன்மைப்படுத்தவும் எதிர்கால சந்ததிகளின் விளையாட்டுதிறனை ஊக்கிவிக்கவும் நாடாத்தப்படுகின்ற தமிழர் விழாவில் இம்முறையும் அதிகான விளையாட்டு வீர வீராங்கனைகள் அகவை பேதமின்றி கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா குறிப்பாக விளையாட்டுக்கழகங்களின் ஒத்துழைப்போடு பயிற்சிகளை மேற்கொண்டு மாவீரரின் வீரத்தை வெளிப்படுத்துகின்ற வகையில் விளையாட்டுக்களத்தில் சாதனைகளை புரிந்துள்ளனர்.

2013 தமிழர் விளையாட்டுவிழாவில் இளம்தளிர், செங்கதிர், தமிழர் வி.க,everest,L�renskog,Stovner,11stars,Norel,Asker og B�rum,Drammen ஆகிய கழகங்களும் தனியார் போட்டியாளர்களும் இணைந்து கொண்டு கடுமையான போட்டிகளை ஏற்படுத்தினர்.

இதேவேளை இவ்விழாவில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தமிழீழ உணவகத்தின் சுவைகுன்றாதா உணவுவகைகளும் வாய்கு ருசியாக அமைந்திருந்தது அதேவேளை நெய்தல் கடையினரின் அதிரடி மலிவுவிலையும் ரிப் ரொப் கடையினரின் அதிரடி தள்ளுபடியும் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது என்றே சொல்லலாம் இம்முறை நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவை இளையவர்களே முன்னின்று நடாத்தியது தமிழ் மக்களை மேலும் மகிழ்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதேபோன்று தமிழர் விளையாட்டு விழாவின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு அணிநடை எல்லோர் மனங்களிலும் தேசிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறார்கள் பிரிவு பெரியவர்கள் பிரிவு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழாவின் சிறார் பிரிவுகளுக்கான மாவீரர் வெற்றிக்கிண்ணத்தினையும் பெரியோர் பிரிவிற்கான மாவீரர் வெற்றிக்கிண்ணத்தினையும் ஸ்ரொவ்னர் விளையாட்டுக்கழகம் தட்டிச்சென்றுள்ளது.