அமெரிக்காவில் நவம்பர் 8–ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. ஜனாதிபதி வேட்பாளர்களாக குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கி வருவதையொட்டி இருவரும் பல்வேறு மாகாணங்களில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நியூயார்க் நகரில் வர்த்தகமையத்தின் இரட்டை கோபுரத்தின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானத்தை மோதி தாக்குதல் நடத்தியதின் 15–வது ஆண்டு நினைவு தினம் நேற்றுRead More →

வடகொரியாவின் அணுகுண்டு சோதனையை தொடர்ந்து, தென்கொரியாவுக்கு ஓலியை விட வேகமாக பறந்து குண்டு வீசும் ஆற்றல் வாய்ந்த போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறும் விதத்தில் வடகொரியா தொடர்ந்து அடாவடியாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியா கடந்த 9 ஆம் தேதியும் 5-வது முறையாக அணுகுண்டு சோதனை நடத்தி, அது வெற்றி கண்டிருப்பதாக அறிவித்துள்ளது. இதுவரை வடகொரியா நடத்திய அணுகுண்டு சோதனைகளில்Read More →

எதிர்வரும் காலங்களில் வட கொரியா அணு குண்டு தாக்குதல் நடத்த முன்வந்தால் அந்நாட்டின் தலைநகரை பூண்டோடு அழித்துவிடுவோம் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வட கொரியா தொடர் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 2006ம் ஆண்டு ‘இனி எவ்வித அணுகுண்டு பரிசோதனைகளை நடத்தக்கூடாது’ என ஐ.நா சபை தடை விதித்தது. இதுமட்டுமில்லாமல், வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்து ஐ.நாRead More →

நேபாள பிரதமராக மாவோயிஸ்டு தலைவர் பிரசண்டா கடந்த 4–ந் தேதி பதவி ஏற்றார். அவர் நேபாள பிரதமர் ஆவது, இது 2–வது முறை ஆகும். இந்நிலையில், 4 நாட்கள் பயணமாக பிரசண்டா 15–ந் தேதி இந்தியாவுக்கு வருகிறார். இதுதொடர்பாக நேபாள பாராளுமன்ற கமிட்டி கூட்டத்தில் நேற்று பேசிய பிரசண்டா, தனது பயணத்தால், இந்தியா–நேபாளம் இடையிலான உறவு இயல்புநிலையை அடைவதுடன், பரஸ்பர நம்பிக்கைக்கு வலிமையான அடித்தளம் அமைக்கும் என்று கூறினார். மேலும்,Read More →

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தான்சானியாவில் உகாண்டா மற்றும் ருவாண்டா நாடுகளின் எல்லைக்கு அருகே நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் வடக்கு பகுதியை கடுமையாக உலுக்கியது. உள்ளூர் நேரப்படி பகல் 3.27 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.Read More →

வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவுக்கு வடக்கே டோங்கி என்ற இடத்தில், ‘டெம்பாகோ பேக்கேஜிங் பேக்டரி’ என்ற பெயரில் 4 தளங்களுடன் கூடிய கட்டிடத்தில் ஒரு ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையில் நேற்று காலை சுமார் 6¼ மணிக்கு வழக்கம்போல தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு பாய்லர் (கொதிகலன்) வெடித்து தீப்பிடித்தது. தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவியது.Read More →

சிரியா முழுவதும் நாளை (திங்கட்கிழமை) மாலை முதல் சண்டை நிறுத்தம் செய்வதற்கு, அமெரிக்காவும், ரஷியாவும் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. சண்டை சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. மிதவாத கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்காவும், அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ரஷியாவும் ஆதரவு அளித்து வந்தன.இந்த சண்டையில் சுமார் 3 லட்சம் பேர்Read More →

வடகொரியா தனது ஐந்தாவதும் சக்திவாய்ந்ததுமான அணுவாயுத சோதனையை முன்னெடுத்துள்ளதாக தென்கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணுவாயுத சோதனை தளத்திற்கு அண்மித்த பகுதியில் 5.3 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளதுடன், இவை அணுவாயுத பரிசோதனையால் ஏற்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. எனினும், தென்கொரியாவின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் வடகொரியா இதுவரையில் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கவில்லை. வடகொரியா ஒருபோதும் அல்லாத அளவில் சக்திவாய்ந்த அணுவாயுத சோதனையை முன்னெடுத்துள்ளதை தாம் மதிப்பிட்டுள்ளதாக தென்கொரிய கூட்டுப் படைகளின்Read More →

அமெரிக்கா அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடையப் போவதைத் தொடர்ந்து வருகிற நவம்பர் மாதம் 8ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பின்படி, ஹிலாரியை விட டொனால்ட் டிரம்புக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் சர்ச்சைகளை கருத்துகளை தெரிவித்து வரும் டிரம்ப், ஒபாமாவைவிட புதின் சிறந்த தலைவர்Read More →

லாவோஸ் நாட்டில் வியன்டியான் நகரில் 14-வது ஆசியன் மற்றும் 11வது கிழக்கு ஆசிய மாநாடு நடக்க இருக்கின்றது. இந்நிலையில், அதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று அங்கு சென்றார். இன்று மாநாடு தொடங்கி நடந்து வருகின்றது. இந்நிலையில், இந்த மாநாட்டிற்கு இடையில் ஆங்சாங் சூகியை சந்தித்து பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாநாட்டின் விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பிலிப்பைன் அதிபரும் சந்தித்து பேசி உள்ளனர்.Read More →