மும்பையைச் சேர்ந்த தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் தனது தந்தை மற்றும் இரண்டு நண்பர்களுடன் கொல்கத்தா வந்திருந்தார். நேற்று முன்தினம் அவர்கள் உணவு வாங்குவதற்காக ஹவுரா ரெயில் நிலையம் அருகே காரை நிறுத்தினர். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி, காருக்குள் இருந்த பெண் தொகுப்பாளரின் கையைப் பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணும், உடன் இருந்த மற்றொரு தோழியும் கீழே இறங்கி, அந்த ஆசாமியை தாக்கினர்.Read More →

உத்தரகண்டில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கிய 5400 பேர் காணவில்லை என்று அம்மாநில பேரிடர் மீட்பு குழு ஆணையர் அஜய் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு காரணமாக இந்தக் கோரத்தை சந்தித்தது உத்தரகாண்ட் என்பது நினைவிருக்கலாம். உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். மேலும்Read More →

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் சிக்கியிருக்கும் ஸ்வான் டெலிகாம் தம்முடையது அல்ல ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, சிபிஐயிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஸ்வான் டெலிகாம் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை பெற தகுதியற்ற நிறுவனம். ஆனால் முறைகேடு மூலம் அலைக்கற்றை பெற்றது என்பது சிபிஐயின் புகார். இதனால் 3 ரிலையன்ஸ் குழு அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் சாட்சியம் அளித்த அரசியல் தரகர் நீரா ராடியாவும் கூட ஸ்வான்Read More →

நாட்டின் மிக முக்கிய பிரச்சனைகளில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ‘கிட்கி’ (சாளரம்) என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை உருவாக்கியுள்ளது. லோக்சபா தேர்தலை ஒட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் ஊடகங்களில் எப்படி பேச வேண்டும்? எப்படியெல்லாம் பேசக் கூடாது என்பது பற்றிய 2 நாள் மாநாடு நேற்றும் இன்றும் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் 200 காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். மத்திய அமைச்சர்கள் சிதம்பரம்,Read More →

அத்வானியின் அயோத்தி ரத யாத்திரைக்கு பிறகுதான் நாட்டின் தீவிரவாத செயல்கள் பெருகியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். 2002ம் ஆண்டு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் பலனாக தான் இந்திய முஜாகிதீன் இயக்கம் உருவானது என ஷகீல் அகமது சமீபத்தில் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்து பா.ஜ.க.வினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஷகீல் அகமதுவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ஏராளமான பா.ஜ.க. தலைவர்கள் எதிர்தாக்குதல் நடத்தியதால்,Read More →

நரேந்திர மோடிக்கு விசா வழங்கவே கூடாது என அமெரிக்க அதிபருக்கு 12 கட்சி எம்.பி.க்கள் மீண்டும் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். குஜராத்தில் 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது. இதனால் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த தடையை நீக்க வேண்டும் என்று பா.ஜனதா வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் இதற்காகRead More →