26 வருடங்கள் அயராது உழைத்த விடுதலைப் புலிகளின் வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று. திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரம் தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது. மானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான்Read More →

இலங்கையின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும், கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் ஆவர்களின் 7ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். வான்படையின் தலைமையகமும் கட்டுநாயக்க வான்படை தளமும் தமிழ் மக்கள் மீதான வான் தாக்குதல்களுக்கு முக்கிய பங்கை வகிக்கும் வானூர்தி தளங்களாகும். தமிழ் மக்கள் தொடர்ச்சியான வான் குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கில் கொல்லப்படுவதற்கு இந்தRead More →

பச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது.அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற… தலைக்கிரீடம் ஒருபுறம்.. உறுதியாக… உறுதியாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன. இந்திய படைக் காலப்பகுதி, ஓ! அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம். நெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசைRead More →

தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 9 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். தேசத்தின் குரல்Read More →

தலைமைச் செயலகம். தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2015. எமது அன்பிற்கும் மதிப்பிற்கும்… தலைமைச் செயலகம். தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2015. எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காகவும் எமது இனத்தின் இருப்பிற்காகவும் தமது இன்னுயிர்களை ஈகம்செய்த உத்தமர்களை நெஞ்சுருகிப் பூசிக்கும் புனித நாள். பூமிப் பந்திலே தமிழர்களின் சுதந்திர தாகத்தைப் பறைசாற்றிய புனிதர்களைப் போற்றிக் கௌரவிக்கும் தேசியRead More →

எமது தாய்நாடு விடுதலை பெறவேண்டும், எம்மைப் பிணைந்திருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப்படவேண்டும், எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும். இந்த இலட்சியம் ஈடேறவேண்டுமாயின் நாம் போராடித்தான் ஆகவேண்டும், இரத்தம் சிந்தித்தான் ஆகவேண்டும் என்ற தலைவரின் சிந்தனைக்கு நிகராக போராடிவரும் தமிழர்களுக்கு எமது எழுச்சிகரமான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இன்றைய தினமானது எமது தேசியத் தலைவரின் பிறந்தநாள் ஆகும் . தமிழரது துன்பத்தை அகற்ற தமிழருக்குக் கிடைத்த வரமே எமது தலைவர்Read More →

விடுதலை இயக்கத்தின் முதல் மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்த நாளின் ஞாபகத்தினை அடியொற்றி அனுஷ்டிக்கப்படும் மகத்தான நாளே மாவீரர் தினம் என அழைக்கப்படுகின்றது. மாவீரர் தினம் ஆரம்பத்தில் அனுஷ்டிக்கப்படுவதற்கும், தற்போது அனுஷ்டிக்கப்படுவதற்கும் ஒரே காரணம் நிச்சியமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாவீரர் தினம் தோன்றியமைக்கு பின்வரும் சம்பவம் காரணமாக இருக்கலாம். ஒரு நாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது.Read More →

சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சு.ப.தமிழ்ச்செல்வன் 1984 ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 வது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்Read More →

மன்னார் பிராந்தியத் தளபதியாகப் பணியாற்றிய விக்ரர் 12.10.1986 அன்று அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 29 ம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும். யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்துRead More →

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். லெப்டினட் கேணல் சுபன் மன்னார்Read More →