பாரிஸ் நகரில் கடும் குளிரில் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மிகவும் உணர்வுபூர்வமாக பெருந்திரளான மக்களின் பங்களிப்புடன் ஈழ தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மானமாவீரர்களின் வீரவணக்க நிகழ்வுகள் மிகச்சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெருந்திரளான மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வந்திருந்தினர்.தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டு, ஈகைச் சுடர் ஏற்றி, மாதிரி மாவீரர் துயிலும் இல்லம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Read More →