வெற்றிகரமாக நடந்தேறிய கனடிய தமிழர் பேரவையின் 7வது ஆண்டு தைப்பொங்கல் விழா

வெற்றிகரமாக நடந்தேறிய கனடிய தமிழர் பேரவையின் 7வது ஆண்டு தைப்பொங்கல் விழா

canada_pongal tamil comகனடிய தமிழர் பேரவை (CTC) தனது 7வது ஆண்டு தைப்பொங்கல் இரவு விருந்தை கடந்த 18ம் திகதி கொண்டாடியது.
Hilton Toronto Markham Suites Conference Centre இல் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. விருந்துக்கு வருகை தந்த விருந்தினர்களுக்கு மாலையில் தமிழ் கனேடியர்களது கலை பண்பாடு மற்றும் 2013 இல் கனடிய தமிழர் பேரவையின் வியத்தகு சாதனைகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது.

எல்லோரும் எதிர்பார்த்திருந்த கனடிய தமிழர் பேரவையின் இரவு விருந்துக்கு நடுவண் குடியுரிமை மற்றும் குடிவரவு அமைச்சர் மாண்புமிகு கிறிஸ் அலெசான்டர், ஒன்ரேறியோ மாகாண முதலமைச்சர் மாண்புமிகு கத்லீன் வின், தலைமை அமைச்சரின் நாடாளுமன்ற உதவியாளர் போல் கலேந்திரா, பா.உ. மார்க்கம் மேயர் பிராங் ஸ்கார்பித்தி யோன் ரோறி, யோர்க் பிரதேச காவல்துறை முதன்மை அதிகாரி எரிக் ஜோல்லிவ் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரொறன்ரோவுக்கான இந்திய துணைத் தூதர் திரு அகிலேஷ் மிஸ்ரா ரொறன்ரோ அய்க்கிய அமெரிக்க நாட்டு தூதராலய துணைத் தூதர் திரு டேவிட் ஸ்வாலி கல்விமான்கள் சட்டத்தை செயல்படுத்தும் உறுப்பினர்கள் வணிகம் மற்றும் சமூகத் தலைவர்கள் வருகை தந்திருந்தார்கள்.

மத்திய அரசின் லிபரல் கட்சித் தலைவர் திரு யஸ்ரின் ரூடோ சிறப்பு விருந்தினராகவும் வட மாகாண சபைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்டார்கள்.

ஒன்ரேறியோ பழமைவாதக் கட்சியின் தலைவரும் உத்தியோக எதிர்க்கட்சித் தலைவருமான திரு ரிம் குடக் தைத்திங்களை தமிழ் மரபுத் திங்களாக அறிவிக்கும் சட்டவரவைக் கொண்டுவர தான் எடுக்கும் முயற்சி பற்றிக் குறிப்பிட்டார். மூன்று அரச மட்டத் தலைவர்களது வாழ்துச் செய்திகளும் நிகழ்ச்சியின் போது படிக்கப்பட்டன.

முன்னைய காலம் போல எமது சமூக மாற்றத்துக்குத் தங்கள் அசாதாரண தொலைநோக்கு விடாமுயற்சி மற்றும் ஈடுபாடு மூலம் மீள்வரையறை செய்யப்பட்ட அல்லது வலிமைப் படுத்தப்பட்ட “மாற்றத்துக்கான தலைவர்” களுக்கு விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.

இந்த ஆண்டு அமைதி மற்றும் நீதிக்கான சிறீலங்கா இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் கிரேய்க் ஸ்கொட் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு “தொண்டுக்கான மிகுசிறப்பு விருது” சிறிலங்கா வைத் தளமாகக் கொண்டு இயங்கும் உதயன் செய்தித் தாளுக்கு வழங்கப்பட்டது.

சுதந்திரமான துல்லியமான மற்றும் பொறுப்பு வாய்ந்த செய்திகளை வெளியிடும் சூழ்நிலை முற்றாகக் காணப்படாத போதும் ஊடகத்துறையில் உதயன் ஒரு தூணாக நிமிர்ந்து நின்றது. உதயன் நிறுவனத்தின் முகாமை இயக்குநரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன திரு ஈ. சரவணபவன் உதயன் செய்தித்தாள் சார்பாக விருதைப் பெற்றுக் கொண்டார்.

கடந்த 4 ஆண்டுகள் ஆக 2013 லும் கதபே கனடிய அறப்பணிக்கு நடைப் பயணம் மூலம் நிதி திரட்டியது. ஹொலந்து புளோர்வியூ சிறுவர் மறுவாழ்வு மருத்துவ நிறுவனத்துக்கு (Holland Bloorview Kids Rehabilitation Hospital Foundation) டொலர் 65,000 பெறுமதியான காசோலை வழங்கப்பட்டது.

கனடிய தமிழர் பேரவை கடந்த 5 ஆண்டுகளில் 5 அறக்கட்டளைகளுக்கு இரண்டரை இலட்சம் டொலர்களை திரட்டி வழங்கியுள்ளது.

எதிருவரும் மார்ச்சு மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற இருக்கும் அய்க்கிய நாடுகள் மனித உரிமை அவையின் (UNHRC) அமர்வு இடம்பெற இருக்கிறது. இது தொடர்பாக வேண்டப்படும் பாரிய ஈடுபாடு மற்றும் கடுமையான உழைப்புப் பற்றி கனடிய தமிழர் பேரவையின் தலைவர் வருகை தந்த ஒவ்வொரு விருந்தினருக்கும் நினைவு படுத்தினார்.

நீரோ நடன படைப்பாளிகள் மற்றும் தலைமைத்துவம் மற்றும் புதுமைபடைத்தல் Centre for Leadership and Innovation (CFLI) அமைபின் மாணவர்களது மனம் கவரும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.