தமிழர்களின் பண்பாட்டுப் பெருநாளாக அமைந்த பிரான்ஸ் தமிழர் திருநாள் பெருவிழா : – பிரென்சு அரசியல் பிரமுகர்கள் வியப்பு !

தமிழர்களின் பண்பாட்டுப் பெருநாளாக அமைந்த பிரான்ஸ் தமிழர் திருநாள் பெருவிழா : – பிரென்சு அரசியல் பிரமுகர்கள் வியப்பு !

france pongalபிரானஸ் தமிழ் மக்களின் பொதுநிகழ்வென்ற பெருமையோடு தனித்துமாக அமையும் தமிழர் திருநாள் பெருவழா இம்முறையும் எட்டாவது ஆண்டாக களைகட்டியிருந்தது. தமிழர்களின் பண்பாடு சார்ந்து பொங்கல், ஆவணக்கண்காட்சி, தமிழர் உணவுக்காட்சி, கோலமிடல், அகரம் எழுதல், கைவினைக் கண்காட்சி உள்ளடங்கலாக பல்வேறு அரங்க நிகழ்வுகளும் விழாவினை அலங்கரித்திருந்தன. சிறப்பு அதிதிகளாக சுவீடன் கீழத்தேய மத வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பீட்டர் சல்க், புகழ்பெற்ற வாழும் தமிழ் வானொலி தொகுப்பு மேதை பி.எச். அப்துல் ஹமீட், கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைப் பீடாதிபதி பால சுகுமார் பங்கெடுத்திருந்திருக்க பிரென்சு அரசியல் பிரமுகர்கள் தமிழ்சமூக அரசியல் பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்து சிறப்பித்திருந்தனர்.

france pongal1

தமிழர்களின் தொன்மவாத்தியமான பறையிசை அணிவகுப்பு பலரைiயும் மனவெழுச்சி கொள்ள வைத்திருந்ததோடு, பொங்கல் பானையினை குதிரையாட்டம் – பறையிசையோடு அலங்கார அணிவகுப்பாக அரங்கிற்கு அழைத்து வரப்பட்டிருந்த காட்சி பலரையும் வியப்பூட்டியிருந்தது.

தமிழ்வானொலி தொகுப்புமேதை பி.எச். அப்துல் ஹமீட் அவர்கள் சிறார்களின் கரம்பிடித்து அகரம் எழுதிவைத்திருந்ததோடு, தமிழ் – தமிழர் பண்பாடு சார்ந்து சிறப்புரையிரையினை வழங்கியிருந்தார். கூடவே குழந்தைகளுக்கு தமிழர் உணவு சார்ந்து போட்டியொன்றினையும் நடாத்தியிருந்தார்.

france pongal2

மூத்தலைஞர் ஏ.ரகுநாதன் அறக்கட்டளை சார்பாக ஈழத்தவர் திரைக்கலைஞர் பாஸ்கரன் அவாகள் மதிப்பளிக்கப்பட்டிருந்ததோடு, சிலம்பு அமைப்பின் தமிழ் ஒலிபரப்பிற்கான பி.எச்.அப்துல் கமீட் அறக்கட்டளையின் முதன்விருதினை இந்நாளில் எஸ்.கே.இராஜன் அவர்களும் பெற்றுக் கொண்டிருந்தனர்.