யாழ் பல்கலைக்கழத்திலிலும் தைப்பொங்கல் விழா மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது

யாழ் பல்கலைக்கழத்திலிலும் தைப்பொங்கல் விழா மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது

University-jaffna0140114-Pongaltamil  (1)யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மாட்டுவண்டியில் தமிழரின் உடையணிந்தபடி வருகை தந்து பொங்கலிட்டு தமிழர் புத்தாண்டை வெகுசிறப்பாக கொண்டாடியுள்ளனர். மஞ்சள் சிவப்பு நிறக் கொடிகள், தோரணங்கள், வாழை மரங்களால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு இடத்தில் பொங்கலிட்டு அக மகிழ்ந்துள்ளனர்.

கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இன்நிகழ்வில் போராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதேவேளை நீண்ட இடைவெளிக்கு பின்னர் இன்நிகழ்வு யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.