கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக அறிந்தாரா?: ஷாருக்கான்

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக அறிந்தாரா?: ஷாருக்கான்

sharukபாலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான். இவருக்கு கௌரி என்ற மனைவியும், ஆர்யன் என்ற மகனும், சுஹானா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் மூன்றாவதாக ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்த ஷாருக்கான் இதற்காக வாடகைத்தாய் ஒருவரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கருவுற்றிருக்கும் அந்த வாடகைத் தாயின் வயிற்றில் இருக்கும் கரு ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்வதற்காக ஷாருக்கான் வாடகைத் தாயை மருத்துவமனை ஒன்றில் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையறிந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஷாருக்கானுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. மேலும் இதுகுறித்து மும்பை மாநகராட்சியிலும் புகார் கூறியுள்ளன.

அதன் அடிப்படையில் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் ஷாருக்கான் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். ஆனால் ஷாருக்கான் ஊரில் இல்லாததால் இதுகுறித்து பதில் அளிக்க முடியாது என அவரது உதவியாளர் கூறிவிட்டார். எனவே, அவர் மும்பை திரும்பியதும் அவரிடம் இதுகுறித்து விசாரிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

பிரசவத்திற்கு முன்னர், பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என அறிந்துகொள்ளவும், கருவை கலைப்பதற்கும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.