சுவிட்சலாந்து லுட்சன் மாநிலத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தமிழர் விளையாட்டு நிகழ்வு

சுவிட்சலாந்து லுட்சன் மாநிலத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தமிழர் விளையாட்டு நிகழ்வு

swiss_luzern_tamilmainrimசுவிட்சலாந்தின் தமிழர் வளையாட்டு நிகழ்வு லுட்சன் மாநிலத்தில் வெகு விமரிசையாக இடம் பெற்றது தமிழ் மன்றத்தின் வருடாநத விளையாட்டுப் போட்டியாக நடைபெறும் இன் நிகழ்வு சனி காலை 10.00 மணியளவில் தமிழ் மன்றத் தலைவர் திரு. ரஞ்சன் அவர்களின் தலைமையில் விளையாட்டுத் துறைப் பொறுப்பாளர்…
..திரு மணிவன்னனின் மன்றக் கொடி ஏற்றலுடன் தமிழரின் போராட்ட வாழிவில் இன் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் பொதுமக்களுக்கான அக வணக்கத்துடன் விளையாட்டு நிகழ்வுகள் சம்பிரதாயமாக ஆரம்பிக்கப்பட்டது.

தொடக்க நிகழ்வாக ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சென்ற வருமம் விளையாட்டில் சம்பியனான மாணவ மானவியர் ஒலிம்பிக் சுடரை ஏற்றி வைக்க உடற்பஙிற்சி கண்காட்சியுடன் மைதான விளையாட்டுக்கள் ஆரம்பமாயின 7வயது தொடக்கம் 19வயதுக்குட்பட்டவர்கட்கான விளையாட்டுக்களில் சிறுவர்கட்கான விளையாட்டு மற்றும் ஓட்டம் குண்டு எறிதல் நீளம் பாய்தல் பார்வையாளர்கட்கான நீண்ட தூர ஓட்டம் அஞ்சல் ஓட்ட விளையாட்டு என்பன இடம் பெற்றன

இறுதியில் கடந்த கால ஒலிம்பிக் விளையாட்டில் இறுதிச் சுற்றி கலந்து கொண்டவரும் லுட்சன் விளையாட்டுக் களகம் ஒன்றில் பயிற்று விப்பாளராகவும் இருக்கும் பிரதம பயிற்சியாளர்கள் மற்றும் தமிழ் மன்ற ஆசியர்களால் வெற்றியீட்டிய வீர வீராங்கனைகளுக்கான வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன