விக்னேஸ்வரனைக் கைது செய்ய வேண்டும்! – என்கிறார் கோத்தா

விக்னேஸ்வரனைக் கைது செய்ய வேண்டும்! – என்கிறார் கோத்தா

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் மோசமான இனவாதிகள் என்றும் அவர்களைக் கைது செய்யுமாறும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாணத்திற்குச் சென்றால் இனவாதக் குழுவினரை பிடித்துக்கொள்ள முடியும். அங்குதானே அனைவரும் உள்ளனர். இனவாதப் பிரிவினர் தெற்கில் இருக்கின்றனர் என யார் கூறியிருக்கின்றனர்? மிகப்பெரிய இனவாதியான விக்னேஸ்வரன் அங்கு இருக்கின்றார். அவரே இனவாதப் பேச்சுக்களைப் பேசுகிறார். அவரைப் பிடிப்பதாக யாராவது கூறியிருக்கிறார்களா?

“பொதுபல சேனாவா அல்லது வேறு யாரும் செய்தார்களா என்பதை கைது செய்து தான் பார்க்க வேண்டும். சட்டத்தை அமுல்படுத்துவது நாங்கள் அல்ல” – என்றும் அவர் குறிப்பிட்டார்.