படையினரிடம் சரணடைந்தோர், கைது செய்யப்பட்டடோர் விபரங்களை வெளியிடுமாறு உத்தரவிடுவேன்! – ஜனாதிபதி

படையினரிடம் சரணடைந்தோர், கைது செய்யப்பட்டடோர் விபரங்களை வெளியிடுமாறு உத்தரவிடுவேன்! – ஜனாதிபதி

போரின் போதும், போருக்குப் பின்னரும் படையினரிடம் சரணடைந்த மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை, உடனடியாக வெளியிடுமாறு, முப்படையினருக்கு உத்தரவிடுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.

இதன் மூலம், வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலிருந்தும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

யாழ்ப்பாணத்துக்கான பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றில், இது தொடர்பான கலந்துரையாடல்களையும் இன்று மேற்கொண்டார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த போதே ஜனாதிபதி இந்த வாக்குறுதியை அளித்தார். நாளை நடக்கும் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் இந்த உத்தரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.