2020 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறமாட்டாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.