முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அமெரிக்காவுக்குப் பயணமாகியுள்ளார். கோத்தபாய ராஜபக்சவுடன் அவரது மனைவி அனோமா ராஜபக்சவும் சென்றுள்ளார். இன்று அதிகாலை 2.50 மணிக்கு டோஹா கட்டார் நோக்கி பயணித்த ஈ.கே.349 என்ற விமானத்தில் கோத்தபாய பயணித்துள்ளார்.

அமெரிக்காவில் தனது சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக கோத்தபாய அமெரிக்க சென்றுள்ளதாக ராஜபக்ச குடும்ப தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.