முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று மாலை மகசீன் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று மாலை மகசீன் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

அவரது நலம் விசாரிப்பதற்காக கொழும்பு மகசின் சிறைச்சாலை மஹிந்த ராஜபக்ச சென்றுள்ளார்.

மஹிந்தவுடன் கூட்டு எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் இணைந்திருந்தனர்.