சமஷ்டி என்றாலே பிரிவினை என்ற தவறான கருத்து, சிங்கள மக்கள் மத்தியில் தென்னிலங்கை அரசியல்வாதிகளால் பரப்பப்பட்டு வருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இரட்டை நகர உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடும் பொருட்டு கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் அங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

சமஷ்டி தீர்வை அரசாங்கம் நிராகரிக்கின்ற நிலையில் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் சமஷ்டி மூலம் ஒரே நாட்டிற்குள் எம்மை நாமே ஆளக்கூடிய நிரந்தர தீர்வு வேண்டுமென வலியுறுத்தினார்.