இலங்கை வடமாகாண முதலமைச்சர் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கனடா ரொரான்ரொ பியர்சன் விமானநிலைத்தை சென்றடைந்தார்.

கனடா மார்க்கம், பிரம்ரன் நகரங்களோடு இரட்டை நகர உடன்படிக்கைகளை மேற்கொள்ளவும் சமூகம்சார்ந்த சந்திப்புகளையும், கனடா அரச மட்டங்களில் பல சந்திப்புகளை நடத்துவதற்குமாக கனடா சென்றடைந்தார்.

மார்க்கம் நகரசபை சார்பில் லோகன் கணபதி மற்றும் கனடா அரசின் சார்பில் பிரம்டன் மேற்கு நாடாளுமன்ற உறுப்பினர் kamal Khera ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்கள்.

முதலமைச்சர் நாளை முதல் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளார்.  பொதுமக்கள் கலந்து கொள்ளும் ஒரு நிதி சேர் பெருநிகழ்வாக முதல்வரோடு ஒரு மாலைப்பொழுது 8ம் திகதி ஞாயிறு Pearson Convention center இல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.