செந்தூரன் தலைமையில் இயங்குகிறதாம் ஆவா குழு! – சிங்கள ஊடகத்தின் கண்டுபிடிப்பு

செந்தூரன் தலைமையில் இயங்குகிறதாம் ஆவா குழு! – சிங்கள ஊடகத்தின் கண்டுபிடிப்பு

gangstar-paathala-worldசெந்தூரன் என்ற பாதாள உலகக் குழுத் தலைவர் தலைமையிலேயே ஆவா குழு இயங்கி வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கப்பம் பெற்றுக்கொள்ளல், கொள்ளையிடல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் இந்த ஆவா குழு ஈடுபட்டு வருகின்றது.

புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் ஆவா குழுவின் தலைவர் செந்தூரன் என தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் ஆவா குழுவின் தலைவர் கே.வினோதன் என்ற நபர் கைது செய்யப்பட்டிருந்தார். வினோதனை கைது செய்து விளக்க மறியலில் வைத்ததன் பின்னர் செந்தூரன் ஆவா குழுவின் தலைவராக செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

செந்தூரன் தலைமையில் 13 பேர் ஆவா குழுவில் இணைந்து கொண்டு செயற்பட்டு வருவதாகவும், அச்சுவேலி, மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு ஹாவா குழுவில் அங்கம் வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.