அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு விருது

அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு விருது

juஅமெரிக்க நாட்டில் வசித்து வருபவர் ரமேஷ் ரஸ்கர் (வயது 46). இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானியான இவர் மராட்டிய மாநிலம், நாசிக்கில் பிறந்தவர்.

எம்.ஐ.டி. மீடியா லேப்பில் கேமரா கல்ச்சர் ஆராய்ச்சி குழுவின் நிறுவனராகவும், ஊடக கலைகள் மற்றும் அறிவியல் துறை துணைப் பேராசிரியராகவும் உள்ளார்.

இவருக்கு பிரசித்தி பெற்ற லேமல்சன் எம்.ஐ.டி. விருது கிடைத்துள்ளது. உலக அளவில் வாழ்க்கையை மேம்படுத்துவற்கான கண்டுபிடிப்புகளை செய்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.

இது 5 லட்சம் டாலர் (சுமார் ரூ.3.35 கோடி) ரொக்கப்பரிசை கொண்டதாகும்.

இவர் 75 கண்டுபிடிப்புகளை செய்து, அதற்கான காப்புரிமை பெற்றுள்ளார்.

இவருக்கு விருது வழங்குவது பற்றி லேமல்சன் எம்.ஐ.டி. திட்டத்தின் செயல் இயக்குனர் ஸ்டெபானி கோச் கூறும்போது, ‘‘ரஸ்கர் கண்டுபிடிப்பாளர் என்ற வகையில் பன்முக ஆற்றல் வாய்ந்த தலைவர். கல்வியாளர், வழிகாட்டி. அவர் தனது சொந்தக்கண்டுபிடிப்புகளுடன், சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக உலகளவில் கண்டுபிடிப்பாளர்களையும், சமூகத்தையும் ஒன்றிணைக்கவும் உழைத்து வருகிறார்’’ என குறிப்பிட்டார்.