வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது கொலைவெறித் தாக்குதல் – படுகாயங்களுடன் தப்பினார்

வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது கொலைவெறித் தாக்குதல் – படுகாயங்களுடன் தப்பினார்

jkghjராஜிவ் காந்தி  கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், வேலூர் மத்திய சிறைச்சாலையில், வடமாநில ஆயுள் தண்டனை கைதி ஒருவர் இரும்புக்கம்பியால் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தார்.

வடமாநிலத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனை அனுபவிக்கும் ராஜேஸ் கண்ணா என்ற கைதியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்த தாக்குதலில் பேரறிவாளனுக்கு கையில் பலத்த காயமும், தலையில் சிறிய காயமும் ஏற்பட்டது.

இதையடுத்து சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு,  மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பேரறிவாளானின் கையில் ஏற்பட்ட காயங்களுக்கு ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் குறித்து எதுவும் சரிவரத் தெரியவில்லை என்று பேரறிவாளனின் சட்டவாளர்  தெரிவித்துள்ளார்.