யேர்மனியில் நடைபெற்ற “தமிழீழம்” வெற்றிக் கிண்ணத்துக்கான மென்பந்து துடுப்பாட்டப் போட்டி

யேர்மனியில் நடைபெற்ற “தமிழீழம்” வெற்றிக் கிண்ணத்துக்கான மென்பந்து துடுப்பாட்டப் போட்டி

Germany-tamils-sports-240613-(8)யேர்மனி தலைநகரம் பெர்லினில் சென்ற வாரம் “தமிழீழம்” வெற்றிக் கிண்ணத்துக்கான மென்பந்து துடுப்பாட்டப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது . இவ் விளையாட்டுப் போட்டியில் தமிழருக்கு நிரந்தர தமிழீழ தாயகம் விரைவிலே மலரும் என்ற உறுதியோடு தேசத்தின் விடுதலை மீதும், எமது இனத்தின் பற்றோடும் உறுதியோடும் இறுதி மூச்சு வரை செயற்பட்டு வந்த இனமான இயக்குனர் மணிவண்ணன் அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி செலுத்தப்பட்டு மலர்வணக்கம் சுடர்வணக்கம் செய்யப்பட்டது . தேசியக்கொடி ஏற்றப்பட்டு அணிகளுக்கான துடுப்பாட்டம் ஆரம்பித்தது .

மிகவும் ஆர்வமாக அணிகளுக்கான போட்டிகள் நடைபெற்று இறுதியில் பேர்லின் தமிழர் விளையாட்டுக்கழகம் “தமிழீழம் ” வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்றது .

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு Berlin Rangers Baseball கழகத்தின் தலைவர் அவர்களால் கௌரவிப்பு கிண்ணங்கள் வழங்கப்பட்டு இறுதியில் சுற்றுப்போட்டி மிக சிறப்பாக முடிவுபெற்றது .