நாட்டில் யுத்தநிலை காணப்படாவிட்டாலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய தேவையுள்ளது

நாட்டில் யுத்தநிலை காணப்படாவிட்டாலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய தேவையுள்ளது

jjநாட்டில் யுத்தநிலை காணப்படாவிட்டாலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய தேவையுள்ளது, பாதுகாப்பு தந்திரோபாயம் குறித்து சிறிதளவு அறிந்தவர்களாலும் இதனை விளங்கிக்கொள்ளமுடியும் என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானிடமிருந்து தாக்குதல்கள் விமானங்களை இலங்கைகொள்வனவு செய்ய முயல்வது குறித்து இந்தியா தீவிரகரிசனையை வெளிப்படுத்தியுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எத்தனை தாக்குதல்விமானங்கள் தேவைப்படுகின்றன என்பது குறித்து கருத்துதெரிவிக்க அவர் மறுத்துள்ளார்.

யுத்தம் இல்லாததால் நாடு பாதுகாப்புகட்டமைப்புகளை கலைத்துவிடப்போகின்றது என கருதுகிறீர்களா?யுத்தம் காணப்படாவிட்டாலும் இல்லாவிட்டாலும் பாதுகாப்பை உறுதிசெய்வதே அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயம்,இதன்காரணமாக எங்களிற்கு தாக்குதல்விமானங்கள் மாத்திரமல்ல கடலோரகண்காணிப்பு கப்பல்களும் அவசியம்,

இலங்கைவிமானப்படையை தரமுயர்த்துவதற்காக புதியவிமானங்களை கொள்வனவுசெய்ய வேண்டிய தேவையுள்ளது. இலங்கை ஜனாதிபதிக்கும் பாக்கிஸ்தான் பிரதமரிற்கும் இடையிலான பேச்சுக்களின் போதுவிமானக்கொள்வனவு குறித்த விடயங்கள் இடம்பெறவி;ல்லை.ஊடகங்களில் வந்த அனைத்து தகவல்களும் பிழையானவை, நாங்கள் எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவி;ல்லை,உலகின் எந்த நாட்டிடமிருந்தாவது நாங்கள் விமானங்களை வாங்கவேண்டும்,ஆனால் இந்தியாவிடமிருந்தா அல்லது பாக்கிஸ்தானிடமிருந்தா கொள்வனவுசெய்வது என்பதை நாங்கள் இன்னமும் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்