23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்புரிமையை இழக்கக் கூடிய அபாயத்தில்!

23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்புரிமையை இழக்கக் கூடிய அபாயத்தில்!

download (2)23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்கக் கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாக கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவு பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு போன்றவற்றின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தொடரும்.

இணக்க அரசியல் எனக் கூறிக் கொள்ளும் ஐக்கிய தேசியக் கட்சியினர் நாடாளுமன்றின் உள்ளேயும் வெளியேயும் கடந்த அரசாங்கத்தை விமர்சனம்செய்து வருகின்றனர்.

நல்;லாட்சி அரசாங்கத்தில் இணைந்து கொண்ட எம்மவர்களும் கடந்த அரசாங்கத்தை வெட்கமின்றி விமர்சனம் செய்கின்றனர்.

அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் 23 நாடாளுமன்ற உறுப்பினர்களது நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்ய முயற்சிக்கப்படுகின்றது.

எவ்வாறான சவால்கள் வந்தாலும் எமது பயணம் தொடரும் என பிரசன்ன ரணதுங்க அண்மையில் மினுவன்கொட பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.